பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 3-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதில், வர்த்தக துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது.
இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் இதன் மூலம் பெற்றார்.
இந்நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அருண் ஜெட்லி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்!Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
