பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தர்மதுரை படம் பார்த்து நெகிழ்ந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமிசாமியின் இயக்கத்தில் வெளிவரும் தர்மதுரை படத்தின் பிரத்யேக காட்சியை கண்டுகளித்து பாராட்டினர்.
தன் மருத்துவ குடும்பத்துடன் படம் பார்த்த பா.மா.கா தலைவர் நெகிழ்ந்து மனதார பாராட்டி பேட்டியும் தந்துருக்கிறார்கள்.
மருத்துவர்கள் படம் என்பதால் அதுவும் பா.மா.கா தலைவரின் இப்பேட்டியால் இது முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வாக பார்க்கிறது தர்மதுரை படக்குழு.
“நல்ல கதை, நன்றாக இயக்கியுள்ள படம். தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தர்மதுரை” என்று மருத்துவர் ராமதாஸ் தர்மதுரை படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார். “நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை தர்மதுரை தருகிறது” என்று கூறியுள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் "ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதல்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் சீனு ராமசாமி" என்று தர்மதுரை படத்தை புகழ்ந்தார். தர்மதுரை படத்தில் சமூக நல்லிணக்கம், திருநங்கை மறுவாழ்வு, காதல் ஆகியவற்றை அழகாக சித்தரிக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகாஷ்மோராவில் கார்த்தி
Next Post‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா..?
