Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாடும் திறமையுள்ள மாணவர்களை நடிகர்களாக்கிய ஜேம்ஸ் வசந்தன்..!

•On December 6, 2014
Vaanavil-Vaazhkai-Press-Meet-Images-16
Share

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானதை தொடர்ந்து ஏழு வருடங்களாக இசையமைத்து வந்த ஜேம்ஸ் வசந்தனின் நீண்டநாள் கனவு நனவாகி இருக்கிறது. ஆம்.. தற்போது ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்குவதன் மூலமாக டைரக்‌ஷன் துறையிலும் கால் பதித்துள்ளார்.

கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களாக கல்லூரியில் படிக்கும் 11 பேரை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.. பழைய படங்களைப்போல இதில் நடிப்பவர்களே பாடல்களை பாடும் முறையை மீண்டும் கொண்டுவந்துளார் ஜேம்ஸ் வசந்தன். அதற்கேற்ற மாதிரி பாடும் திறமையுள்ளவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் ஜாஸ், ஹிப்பாப், கானா, கர்நாடகம், நாட்டுபுறம் என பல ஜானர்களில் மொத்தம் 17 பாடல்கள் இடம்பெறுகிறது. ஒரு இன்னிசை சித்திரமாக இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். படத்தை 2015 பிப்ரவரியில் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.