குள்ள மனிதராக நடிக்கிறாரா விஜய்..?

சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துவரும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவரும் நடிக்க, முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி, சுதீப் நடிக்கின்றனர். இன்னும் பெயரே வைக்கப்படாத இந்தப்படத்தின் கதை சரித்திரக்கதை என்று சொல்லப்பட்ட நிலையில் இதைப்பற்றி இன்னும் ஆச்சர்யமான சில செய்திகள் கசிந்துள்ளன.
இந்தப்படத்திற்கு கருடா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமல் நடித்தது போல இந்தப்படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. குள்ள மனிதர்கள் வாழும் தீவில் விஜய் மாட்டிக்கொள்வது போலவும், அங்கு நடக்கும் சாகசங்கள் அதிரடியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
