பாகுபலி 2 இசை வெளியீடு

சமீபத்தில் ஹைத்ராபாத் நகரில் பிரம்மாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து சமுக வலைதளங்களில் பாகுபலி 2 பாடல்கள் வெளியடப்பட்டுள்ளது.
இப்படத்தின் இசை தென்னிந்தியாவின் முன்னணி இசைநிருவனமான லஹாரி மியூசிக் நிறுவனம் இதன் உரிமத்தை பெற்றுள்ளது. எம்.எம் கீரவாணி இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் சாஹோரே பாகுபலி, ஹம்சா நாவா, கண்ணா நிதுரிஞ்சரா, தண்டாலய்யா, ஒக்க பிராணம் உள்ளிட்ட 5 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கடந்த மார்ச் 16ஆம் தேதி தமிழ்-தெலுங்கு-ஹிந்தி-மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியான இப்படத்தின் டிரைலரை 10 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். யூடியூபில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம் எனும் சாதனையை 'பாகுபலி 2' திரைப்படம் படைத்துள்ளது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
