"கருப்பு ராஜா வெள்ளை ராஜா" படம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா தமிழில் இயக்க உள்ள “கருப்பு ராஜா வெள்ள ராஜா” படம் இயக்குகிறார்.
விஷால் - கார்த்தி நடிக்கவுள்ள 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தின் முதன்மை நாயகியாக சைஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2011-ல் விஷால் நடிப்பில் வெளியான 'வெடி' படத்துக்குப் பிறகு தமிழில் படங்கள் இயக்காமல் இருந்தார் பிரபுதேவா. இந்தியில் 'ரவுடி ரத்தோர்', 'ரா. ராஜ்குமார்', 'சிங் இஸ் ப்ளிங்' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
தற்போது மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளார் பிரபுதேவா. விஷால் - கார்த்தி இருவரும் நாயகர்களாக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக சைஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று வெளியான 'வனமகன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஏப்ரல் 14 ல் வெளியாகும்-ப.பாண்டி
Next Postபாகுபலி 2 இசை வெளியீடு
