‘பஞ்சதந்திர’ உதவியாளருக்கு கே.எஸ்.ரவிகுமார் தந்த காஸ்ட்லி கிப்ட்..!

பத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் சாபுசிரில் அவர்களிடம் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவர் அமரன். பத்துவருட கடின உழைப்பின் பலனாக அவருக்கு கிடைத்த கிப்ட் தான் சூப்பர்ஸ்டார் நடித்துவரும் ‘லிங்கா’..
ஆம்.. பத்து வருடங்களுக்கு முன் உதவியாளாராக பணியாற்றிய அந்த அமரன் தான், தற்போது அதே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள, உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ‘லிங்கா’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
‘ஜித்தன்’ படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமாகிய அமரன் தொடர்ந்து மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் படங்களில் தொடர்ச்சியாக கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் அமரன். கலை இயக்கம் பற்றிய அனைத்தையும் சாபுசிரிலிடமே பயின்றதாகவும் தன் சினிமா வாழ்வின் உயரங்களுக்கு சாபுசிரில் அவர்களே காரணம் என்கிறார் அமரன்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
