Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நில மோசடி வழக்கில் சிக்கினார் இசையமைப்பாளர் மணிசர்மா..!

•On July 8, 2014
Mani Sharma
Share

விஜய் நடித்த ‘யூத்’, ஷாஜகான்’, மற்றும் ‘போக்கிரி’’ உட்பட பல படங்களில் துள்ளலாக இசையமைத்து தமிழில் பிரபலமானவர் இசையமைப்பாளர் மணிசர்மா. ஆந்திராவை சேர்ந்த இவருக்கு சென்னை நீலாங்கரை அருகில் உள்ள கானத்தூரில் சொந்தமான நிலம் இருக்கிறது.

ஆனால் இவர் தனது இடத்துக்கு பக்கத்தில் உள்ள 73 சென்ட் இடத்தையும் போலி ஆவணங்களை கொடுத்து தன்னுடைய நிலத்துடன் இணைத்துக்கொண்டிருக்கிறார். இதுபற்றிய குற்றச்சாட்டு வந்தபோது போலீசார் விசாரித்ததில் மணிசர்மா நில மோசடி செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மணிசர்மாவின் மேனேஜரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்ய்யாதிருக்குமாறு கோரி முன் ஜாமீனுக்காக விண்ணப்பித்து இருக்கிறாராம் மணிஷர்மா.. 7 சுரங்களில் எல்லையை சுருக்க வேண்டியவர் 73 செண்ட்டுக்கு தவறாக ஆசைப்பட்டிருக்க கூடாது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.