Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நானும் துவங்க போகிறேன் ஒரு கட்சி:பிக் பாஸ் ஜூலி-அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

•On May 11, 2018
dc-Cover-2djfic4ckt6j8kmrbbstg0ak82-20171007234558.Medi
Share
தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஆளாலுக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க தொடங்கிவிட்டனர். சினிமா உலகில் பல வருடங்கள் அசைக்க முடியாத நட்சத்திரங்களாக விளங்கிய, ரஜினி மற்றும் கமல் அரசியல் கட்சிகள் துவங்கி இருக்கும் நிலையில், நானும் அரசியலுக்கு வருகிறேன், என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் பிக் பாஸ் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசியல்வாதிகள் பற்றி சர்ச்சையான முறையில் கோஷமிட்டு பிரபலமானவர் மரிய ஜூலியானா, அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்று, சின்னத்திரை சினிமா என அசத்தி வருகிறார். எப்பொழுதும் தன்னை சமூக நலனில் அக்கறை உடையவராக காட்டிக் கொள்ளும் ஜூலியானா, விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக, வீடியோ ஒன்றினை தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே காமெடி நடிகர் RJ பாலாஜியும் அரசியலில் குதிக்க இருக்கும் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே தென்படும் வேளையில், சின்னத்திரை பிரபலமான ஜூலியும், அரசியல் கட்சி துவங்க இருப்பது, "ஒட்டு போடுறவங்கள விட, ஒட்டு வாங்குறவங்க அதிகமாகிடுவாங்க போலேயே" என தமிழக மக்களை புலம்ப வைத்திருக்கிறது.
https://twitter.com/lianajohn28/status/994619555103129600

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.