Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழில் டப் ஆகும் மகேஷ்பாபுவின் "பரத் அனே நேனு"

•On May 11, 2018
mahesh
Share

தெலுங்கில்  மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளியான படம் "பரத் அனே நேனு". முதல்வன் பட பாணியில் ஒரு இளைஞன் ஆந்திர முதல்வராகி பல புரட்சிகளை செய்கிற கதை அம்சம் கொண்ட படம்.

ஸ்பைடர் படத்தின் தோல்வியால் தளர்ந்திருந்த மகேஷ் பாபுவுக்கு இந்த படத்தின் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 20ந் தேதி வெளியான படம் இதுவரை 125 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

65 கோடியில் தயாரான படம் 230 கோடி சம்பாதிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய கடும்போட்டி இருந்தது. ஆனால் ரீமேக் உரிமத்துக்கு பெரிய விலை சொல்லப்பட்டதால் யாரும் வாங்க முன்வரவில்லை என்று ஒரு தரப்பும், படம் பக்கா அரசியல் படம் என்பதால் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று பலரும் தயங்கினார்கள் என்று ஒரு தரப்பும் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் படத்தை தயாரித்த டிவிவி நிறுவனமே தமிழில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறது. படத்திற்கு "பரத் எனும் நான்" என்று டைட்டில் வைத்திருக்கிறது.  இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், தேவராஜ், கீரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கொரட்டல சிவா இயக்கி உள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.