நம்பிக்கை இயக்குனர் மீதா? பேய் மீதா?, ஒரே நேரத்தில் ரெண்டு லட்டு..!

மைனா, சாட்டை , மொசக்குட்டி ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் மற்றும் ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் "சவுகார்பேட்டை" படம் இம்மாதம் வெளியாக உள்ளது. ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி நடித்திருக்கும் இப்படம் தரமாக எடுக்கப்பட்டுள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதாலும் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளனராம். அதோடு மட்டுமல்லாமல், அடுத்த அப்டத்தை இயக்கம் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளனராம்.
அடுத்த படமான "பொட்டு" படத்தில் நாயகனாக பரத் நடிக்கிறாராம். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனராம். மேலும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்களாம். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறாராம். இப்படத்தை வடிவுடையானே எழுதி இயக்குகின்றாராம். படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளதாம். இப்படமும் சவுகார்பேட்டை போன்றே திகில் கலந்த பேய் கதையாக உருவாக உள்ளதாம்.
பொதுவாக முதல் படம் வெளிவந்து வெற்றிபெற்ற பின்புதான், அடுத்த படத்தை அதே இயக்குனருக்கு கொடுப்பது தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் வழக்கம். படம் வெளிவரும் முன்பே முந்தைய படத்தின் இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது, தயாரிப்பாளர்களுக்கு பேய் மேல் உள்ள நம்பிக்கையா? அல்லது இயக்குனர் மீது உள்ள நம்பிக்கையா? எனத்தெரியவில்லை.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

