ஒரு நாள் இரவில் என்ன நடக்கும்..?

'திங்க் பிக் ஸ்டுடியோஸ்' சார்பில் ஏ.எல்.அழகப்பனும், 'பால்சன் மீடியா பிரைவேட் லிமிடெட்' சார்பில் சாம்பாலும் இணைந்து வழங்க, சத்யராஜ், யூகி சேது, அனுமோள், வருண் ஆகியோர் நடிப்பில் எடிட்டர் ஆண்டனி இயக்கிய அறிமுகப்படம் 'ஒரு நாள் இரவில்'.
'ஷட்டர்' என்ற பெயரில் மலையாளத்தின் ரீமேக் தான் இந்த 'ஒரு நாள் இரவில்'. மலையாளத்திலும், ஹிந்தியிலும் சுப்பர்ஹிட் அடித்த படம் இது. இப்படத்தின் மூலம் எடிட்டர் ஆண்டனி முதன் முதலாக இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். முதலில் 'நைட் ஷோ' என தலைப்பு வைக்கப்பட்டு பின் வரிவிலக்கு கிடைப்பதற்காக 'ஒரு நாள் இரவில்' என தமிழில் பெயர் வைத்துள்ளனர்.
ரீமேக் படம் என்றாலும் படத்தை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக எடுக்காமல், அதில் உள்ள பத்து காட்சிகளை தூக்கிவிட்டு, தமிழிற்காக புதிதாக காட்சிகளை இணைத்துள்ளனராம். மேலும் மலையாளப்படத்தை விட 40 நிமிடம் குறைவாக எடுத்துள்ளனராம். அடுத்தவர் படத்தை வெட்டிய ஆண்டனி, தன்னுடைய படத்திலும் அதே கொள்கையை கடைபிடித்துள்ளார்.
"படம் போட்டு இருபது நிமிஷத்துக்கு அப்புறம் சீட்டு நுனிக்கு வந்துடுவீங்க . படம் முடியற வரை அசையக் கூட மாட்டீங்க. இன்டர்வெல்ல கூட எல்லாரும் படத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்று பதட்டத்திலேயே இருப்பீங்க" பெருமிதத்துடன் கூறுகின்றனர் படக்குழுவினர். பார்க்கலாம் ஒரு நாள் இரவில் அப்படி என்ன தான் நடக்கப்போகிறது என்று.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

