நடிகை கௌதமியின் மலையாள திகில் படம்...

நடிகை கௌதமி தற்போது தமிழிலும் மலையாளத்திலும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். தற்போது முழு திகில் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் வெளியான ‘சாக் அண்ட் டஸ்டர்’ படம் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை தயாரித்த அம்னி சுரானி தற்போது மலையாளத்தில் திகில் நிறைந்த த்ரில்லர் படத்தை எடுக்க உள்ளார்.
இப்படத்திற்கு ‘ஈ’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கௌதமியிடம் கேட்டுள்ளார். அவரும் உடனடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ‘ஈ’ படம் முழுக்க முழுக்க திகில் படமாம். இப்படத்தில் செக்ஸ் மற்றும் வன்முறை காட்சிகள் கிடையாதாம். இப்படத்தை குக்கூ சுரேந்திரன் இயக்க உள்ளார்.
குக்கூ சுரேந்திரன் இதற்கு முன் ஓரல், ரேஸ் அண்ட் வீரலிப்பட்டு ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஈ படத்தை சங்கீத் சிவன், அமின் சுரானி ஆகியோர் தயாரிக்க உள்ளனர். சங்கீத் சிவன் புரோடெக்ஷன்ஸ் மற்றும் சுரானி பிக்சர்ஸ் பேனரில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
