Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த வருடம் ஜூன் வரை வெயில் வாட்டும்!..

•On April 4, 2017
veppam
Share
veppam கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து, மார்ச், 1 முதல் கோடை வெயில் துவங்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் துவக்கம் முதலே வெப்பம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், 40 டிகிரி செல்சியஸ், சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில், 35 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவானது. ஆனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில், ஜூன் வரை, வெயிலின் அளவு கடுமையாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த இரு மாதங்களுக்கான முன் கணிப்பையும், இந்திய வானிலை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.