Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார்...

•On May 23, 2017
baalaji
Share
baalaji நடிகர் தாடி பாலாஜி இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். இவரது முகம் சின்னத்திரை பார்வையாளர்களுக்கு பரிச்சயம் என்று கூறலாம். இவர்தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார். இவர் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. தற்போது, இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காவல் நிலையம் வரை சென்றுள்ளது. மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா அளித்த புகாரில், கணவர், தன்னை சாதிப்பெயர் பயன்படுத்தி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாதவரம் காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக இவர்கள் இருவரும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சண்டையிட்டுக் கொண்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. thaadi baalaji

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.