நடிகர் செந்தில், குண்டு கல்யாணம் டி.டி.வி. தினகரன் உடன் திடீர் சந்திப்பு!

நடிகர் செந்தில் மற்றும் குண்டு கல்யாணம் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாக பிரிந்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர், அதிமுக ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுங்க தொடர்ந்து போராடி வருகின்றனர். இரண்டு தரப்பினரும் தொடர்ந்து ஆலோசனைக்கூட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் நடிகர் செந்தில், குண்டு கல்யாணம் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அனிதா குப்புசாமி, குப்புசாமி மற்றும் அஜய் ரத்னம் ஆகியோருடனும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக கட்சியின் அவைத்தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதே சமயம் ஓபிஎஸ்ஸூம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார். நடிகர் ஆனந்தராஜ், ராமராஜன், மனோபாலா, அருண் பாண்டியன், பாத்திமா பாபு, லதா ஆகியோர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postநரேந்திர மோடி காப்பாற்றிய பச்சிளம் குழந்தை
