Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“தொடர்ந்து குத்துப்பாட்டா ?” – ‘நோ’ சொன்ன நர்கீஸ் பக்ரி..!

•On August 2, 2014
6C3B5472
Share

இந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. இவர் இப்போது அருண்ராஜ் வர்மா இயக்கி வரும் ‘சாகசம்’ படத்தில் பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.. தற்போது படமாகும் “காரத்தில் காரத்தில் சில்லி இவ” பாடலை மதன்கார்க்கி எழுத தமன் இசையில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.

நேற்று படப்பிடிப்பு தளத்திலேயே பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன். இந்தப்படத்திற்காக புடாபெஸ்ட் நகரில் தான் நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நேராக சென்னை வந்துள்ளார் நர்கீஸ். தமிழில் இது எண்ட்ரி என்பதால்தான் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டாராம் நர்கீஸ் பக்ரி. ஆனால் இதுவே முதலும் கடைசியுமான பாடலாக இருக்குமாம். அடுத்ததாக ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பாராம்.

இந்த பாடல் காட்சியை சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்ட செட் போட்டு தொடர்ந்து ஏழு நாட்கள் படமாக்குகின்றனர்.. ராஜுசுந்தரம் மாஸ்டர் நடனம் அமைக்க, தமன் இசையமைத்துள்ள இந்தப்பாடலுக்கு 50 ரஷியன் டான்சர்களுடன் நம்ம ஊர் டான்சர்கள் 100 பேரும் ஆடுகிறார்களாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.