சமுத்திரகனி டைரக்ஷ்னில் மீண்டும் அமலாபால்..!

‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் கிட்ணா என்ற படத்தில் தன்ஷிகா நடிக்கிறார். இன்னொரு முக்கியமான கதாநாயகியாக அமலாபால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு கதைகளை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியாக இந்தப்படத்தை உருவாக்க இருக்கிறார் சமுத்திரகனி.
கிராமங்களில் கிருஷ்ணன் என்கிற பெயர் கொண்டவர்களை மரியாதை நிமித்தமாக ‘கிட்ணா’ என்று அழைப்பார்களாம். அதையே தனது படத்தின் தலைப்பாக வைத்துள்ள சமுத்திரக்கனி, படத்தை தயாரித்து இயக்குவதோடு கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. அமலாபால் சமுத்திரக்கனியின் மகளாக நடிக்கிறார். காட்டுக்குள்ளேயே நடக்கும் த்ரில்லர் கதையாக இது உருவாக இருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
