Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக தலைவரிடம் வைர விழா அழைப்பிதல் கொடுத்த திமுக செயல்தலைவர்...

•On May 24, 2017
kalai
Share
kalai தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏ-வாக அடி எடுத்து வைத்து, தற்போது 60 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதை வைரவிழாவாகக் கொண்டாட முடிவுசெய்து, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க-வினர் உற்சாகமாக வேலைசெய்து வருகின்றனர். கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, இந்த வைர விழா நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர்.வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் அளித்துள்ளனர். அதன் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 12ம் தேதி கனிமொழி பிறந்த நாளன்று கருணாநிதியிடம் ஆசிபெறும் புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.