Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு

•On January 4, 2017
article-2298165-18e16a3c000005dc-668_634x343
Share
article-2298165-18e16a3c000005dc-668_634x343திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொது செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன். திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. கூட்டத்தில் மறைந்த முதலவர் ஜெயலலிதா, மறைந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல்காஸ்ட்ரோ ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் 'தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்', 'பிரதமர் மோடியை எதிர்த்து கண்டன தீர்மானம்', 'ரூபாய் நோட்டு வாபஸ் உத்தரவை எதிர்த்து தீர்மானம்', 'மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.