Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தல அஜீத்தின் "விவேகம்" படத்தின் ரிலீஸ் தேதி.

•On February 27, 2017
vivegam-first-look-poster-thala-57-ak-57_640x480_61486014311
Share
vivegam-first-look-poster-thala-57-ak-57_640x480_61486014311 சத்ய ஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தல அஜித்தின் 57 வது படம் "விவேவகம்" மிக வேகமாக தயாராகி வருகிறது. தல அஜித்தின் படம் வந்து ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் அஜித் படம் எப்போது வருமென அவரது ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள். அஜித் விவேகம் படத்தில் சர்வேதச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் கதாநாயகன் விவேக் ஓபராய் வில்லனாக இப்படத்தில் நடிக்கிறார்.பெரும் பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பல்கேரியாவில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இப்படத்தின் கடைசி ஷெட்யூல் வருகிற மார்ச் 2ந்தேதி முதல் படமாக்கப்பட இருக்கிறது. வருகிற ரம்ஜான் ஜீன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. மேலும் அஜித் பிறந்த நாளான மே 1ந்தேதி படத்தின் டிரெயலரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் எப்போது வரும் எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்கு இது இனிப்புச் செய்தியாக வந்திருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.