தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால் விட்ட விஷால்

பரத், பிரேம்ஜி நடிப்பில் உருவான சிம்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் தமிழ்ராக்கர்ஸை தாக்கி பேசினார்.
சிம்பா படத்தின் குழு இந்த்ப்படத்தை இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையான உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெறும். பரத் மிகச் சிறந்த நடிகர். தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு மிகப்பெரிய டான்ஸர் அவர்தான். எனது மிக நெருங்கிய தோழன். அவன் வெற்றி பெற்றால் நான் மிக மகிழ்ச்சியடைவேன்.
இந்தப்படம் தாயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகே வருகிறது அதனால் என்னால் ஒரு உறுதி மொழி அளிக்க முடியும். இந்தப்படத்தின் ரிலீஸின் போது எந்த ஒரு இணையதளத்திலும் வராது. நான் யாரை சொல்கிறேன் என்று தெரியும் "நானா நீயா" எனப் பார்த்து விடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்துக்கு சவால் விட்டு பேசினார். தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் தமிழ்ப்படங்களை ரிலீஸ் அன்றே வெளியிடுவது எல்லோரும் அறிந்ததே!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
