தமிழக அரசியலில் குழப்பம் நிலவுகிறது! ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

சென்னை ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், உள்ளாட்சி தேர்தல் நடத்தும் போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவை வாபஸ் பெற்று கொள்ள வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை முழுமையாக விசாரித்து நாங்களே தீர்ப்பு வழங்குவோம் எனக்கூறினர்.
தொடர்ந்து தேர்தலை நடத்துவதில் காலதாமதம் ஏன் என்பது தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டனர்.
அதற்க்கு மாநில தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாதங்களாகும். தொகுதி மறுவரை செய்யும் பணிகள் நிறைவடைய 6 மாதங்கள் ஆகும். இதனால், தற்போது தேர்தலை நடத்த முடியாது எனக்கூறியது.
அப்போது நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் காலதாமதம் செய்வது, தமிழக அரசியலில் குழப்பம் இருப்பதை காட்டுவதாக கூறினர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
