சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை!

சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தினசரியும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை காலத்தில் அநேக இடங்களில் மழை பெய்யவில்லை. இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. பகல்நேரங்களில் வெயில் வாட்டினாலும் மாலை நேரங்களில் மழையும் கொட்டித் தீர்க்கிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், ஏற்கெனவே உள்ள வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
