தப்பியோடிய மர்ம நபர்கள்!இலங்கையில் சிறைச்சாலை பஸ் தாக்குதல்....

இலங்கையில் சிறைச்சாலை பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டு நடத்தியதில் 5 கைதி களும் 2 போலீஸ்காரர்களும் உயிரிழந்தனர்.இலங்கையின் களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் அடைக் கப்பட்டுள்ள 5 கைதிகளை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதற் காக நேற்று பஸ்ஸில் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பாது காப்புக்காக ஆயுதம் ஏந்திய 6 போலீஸ்காரர்கள் உடன் சென்றனர்.
சிறைச்சாலை பஸ் காட்டுபகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது சில மர்மநபர்களால் துப்பாக்கி சூட்டு நடத்த பட்டது.இதில் 5 கைதிகள், 2 போலீஸ் காரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இவர்கள் அங்குள்ள நாகோடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பிறகு அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இலங்கை போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, மர்ம நபர்கள் தாக்குதலில் கைதிகள் உதயசாந்த பத்திரன உட்பட 5 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைத் துறை அதிகாரிகள் சன்னிகம, விஜயரத்ன ஆகியோர் பலியாகினர். கோஷ்டி மோதல் காரணமாக கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
