தனுஷின் " வேலையில்லா பட்டதாரி 2 " ஜூலை 28 வெளியீடு!

ப.பாண்டி’ படத்தைத் தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
சமீபத்தில் மும்பையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, இப்படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தனுஷ், "எடிட்டர் பிரசன்னா, சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மேதை சீன் ரோல்டன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாது இப்படத்துக்காக கடினமாக உழைத்த குழுவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஜூலை 28-க்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். எனக்காக எப்போதும் நிற்கும் எனது ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேல்ராஜ், அனிருத், ராஜேஷ் என வேலையில்லா பட்டதாரி பாகம் 1-ல் பணியாற்றியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் உடன் அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை தாணு வெளியிடவுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
