அதிரடி மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ள வாட்ஸ் ஆப்!

வாட்ஸ் ஆப் மொபைல் அப்ளிகேஷன் உலகின் அதிகம் பேர் பயன்படுத்தும் மெசென்ஜர் அப்ளிகேஷனாக உள்ளது. தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள போட்டியாளர்களான ஹைக், டெலகிராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களின் தனித்துவங்களையும் இணைத்து வருகிறது.
இந்த வகையில் புதிதாக வந்திருக்கும் அப்டேட் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை அடுத்தடுத்து அனுப்பும்போது அவற்றை இணைத்துக்கொடுக்கும் Photo Bundling என்ற புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ் ஆப் கால்களின் தோற்றமும் மாறியுள்ளது. இதுவரை APK மற்றும் Zip ஃபைல்களை அனுப்புவதற்கா வசதி இல்லை என்ற குறையையும் இந்த அப்டேட் போக்கியுள்ளது. எந்த விதமான ஃபைலயும் இப்போது வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப முடியும்.
இந்த அப்டேட்டுக்கு பயனாளர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, Photo Bundling வசதி பலரையும் கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
