Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தத்துக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா

•On August 10, 2017
hanshika
Share
hanshika தமிழ் சினிமா ரசிகர்களின் 'டார்லிங்' என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி நேற்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல், தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். நேற்று காலையில் தன் தாயார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் ஹன்சிகா பங்கேற்றார். பிறகு அவர் தத்தெடுத்து வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். பின்னர் பரிசுகளையும் கேக்குகளையும் அந்த குழந்தைகளுக்கு பகிர்ந்துள்ளர். இது போன்று ''பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார் எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ''சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்'' என புன்னகையுடன் த்ரிவிர்த்துள்ளர் ஹன்சிகா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.