Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெயம் ரவி, ஹன்சிகாவுக்கு கும்பகோணத்தில் என்ன வேலை..?

•On September 4, 2014
romeo juliet 1
Share

2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி. இணைந்திருக்கும் படம் தான் ரோமியோ ஜூலியட். எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த லட்சுமண் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். 1947களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவுக்கும், 2025-ல் தன் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கால்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயினுக்கும் இடையே ஏற்படும் காதல் தான் இந்தப்படம்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப்படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது கும்பகோணத்தில் முகாமிட்டுள்ளனர் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும். கும்பகோணத்தில் உள்ள கோயில்களின் பின்னணியில் ஒரு பாடல் காட்சியையும் சில செண்டிமெண்ட்டான காட்சிகளையும் எடுக்க இருக்கிறாராம் இயக்குனர் லட்சுமண்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.