ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'ஜெய் லவ குசா'வின் மூன்றாவது போஸ்டர் வெளியானது!

ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய்லவகுசா. செப்டம்பர் 21-ந்தேதி வெளியாகும் இந்த படத்தை பாபி இயக்கியுள்ளார்.
மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர், ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொருவிதமான உடல்கட்டு மற்றும் கெட்டப்புக்கு மாறி நடித்திருக்கிறார்.அதோடு, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தபோது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் பங்கேற்றதால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்கிற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், சொன்னபடி படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெற்ற புனேவுக்கே ஜெய் லவகுசா யூனிட்டை அழைத்து சென்று படத்தில் நடித்து முடித்தார் ஜூனியர் என்டிஆர்.
இந்தநிலையில், தற்போது செப்டம்பர் 21-ந்தேதி ஜெய்லவகுசா வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஜெய் மற்று லவா கேரக்டர்களுக்கான போஸ்டர் டீசர்கள் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குசா கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
