Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா நீக்கம், டிடிவி. தினகரன் அதிரடி அறிவிப்பு!

•On August 26, 2017
kokula
Share
kokula அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிற்கு நடிகர் செந்திலை டிடிவி. தினகரன் நியமித்துள்ளார். அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் மாற்றத்தை அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி . தினகரன் வெளியிட்டு வருகிறார். அமைச்சர்கள் காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர், ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை தினகரன் வெளியிட்டார். இந்நிலையில் இன்று அதிரடியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து கோகுல இந்திரா நீக்கம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். senthil இதே போன்று அரியலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமரை எஸ்.ராஜேந்திரன் நீக்கப்பட்டு பெ.முத்தையன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து குமரகுரு எம்எல்ஏ விடுவிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ ஞானமூர்த்தியும், சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் செந்தில்நாதன் விடுவிக்கப்பட்டு உமாதேவன் புதிய செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.