Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகவிருக்கும் பாகுபலி கதாநாயகி!..

•On May 8, 2017
ஜி.வி
Share
ஜி.வி பி.சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகன், தமன்னா கதாநாயகியாக நடித்த தெலுங்கு படம் ‘100% லவ்’. 2011-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற இந்தப்படம் இப்போது தமிழில் ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய பி.சுகுமார் தமிழில் தயாரிக்கிறார். எம்.எம்.சந்திரமௌலி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். அதோடு படத்திற்கு அவரே இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் ஒரிஜினலான ‘100% லவ்’ படத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னாவையே ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தமன்னாவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.