ஜில்லா இயக்குனரின் அடுத்த படம் யாருக்கு...?

விஜய்யையும் மோகன்லாலையும் வைத்து பிளாக் பஸ்டர் படமாக ‘ஜில்லா’வை இயக்கியவர் இயக்குனர் ஆர்.டி.நேசன். படமும் 100 நாள் ஓடி வெற்றிவிழாவும் கொண்டாடியது. தனது அடுத்த அடியை நிதானமாக எடுத்து வைக்க விரும்பிய நேசன் பக்காவான ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து, மிகப்பெரிய ஒரு தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.
அது வேறு யாருமல்ல.. நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் தான்.. அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை தொடர்ந்து நல்ல இயக்குனர் வலுவான கதை ஆகியவற்றுடன் களம் இறங்க காத்திருந்த விஜயா புரொடக்ஷன்ஸுக்கு நேசன் சொன்ன ஸ்கிரிப்ட் பிடித்துவிட்டது.
டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் அனேகமாக ஆர்யா, ஜெயம் ரவி, விஷால் ஆகிய மூவரில் இருவர் நடிக்க வாய்ப்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
