Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜியோ போன் இலவசம் 'முகேஷ் அம்பானி' அறிவிப்பு!

•On July 21, 2017
ambani
Share
ambani மும்பையில் நடந்த ரிலையனஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் 40 ஆண்டு பொதுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ''ஜியோ போன் முற்றிலும் இலவசம். பணம் செலுத்த வேண்டியதில்லை. எப்போதும் வாய்ஸ் கால் இலவசமாக கிடைக்கும். மாதம் ரூ.153-க்கு அளவற்ற டேட்டாவை ஜியோ போன் பயனாளர்கள் பெறலாம். ஜியோ போன் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டாலும், செப்டம்பர் மாதம் தான் மக்களுக்கு கிடைக்கும். இந்த போன் வேண்டுவோர் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஜியோ ஆப்லைன் ஸ்டோர்ஸ், மைஜியோ ஆப் ஆகியற்றில் பதிவு செய்து கொள்ளலாம். ரூ. 1,500 டெபாசிட் செய்து போன் பெற்றுக்கொண்டால் 3 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தொகை முழுவதும் திருப்பி அளிக்கப்படும். இந்தியவர்கள் அனைவராலும் அதிக பணம் செலுத்தி இன்டர்நெட் வசதி பெற முடியாது என்பதால் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ போனை எந்த வகையான டிவிக்களிலும் இணைத்துக் கொள்ளலாம். கூடுதலாக டேட்டா தேவைப்பட்டால் ஜியோ தன் தனா தன் திட்டத்தின் கீழ் ரூ. 309 செலுத்தி கூடுதல் டேட்டா பெற்றுக் கொள்ளலாம். reliance வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 10,000 ஜியோ அலுவலகங்கள் கொண்டு வரப்படும். ஒவ்வொரு வாரமும் 5 மில்லியன் போன்கள் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று முகேஷ் அம்பானி அறிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.