Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘சைவம்’ படத்தை பார்த்து பாராட்டிய அமலா

•On June 23, 2014
Saivam Movie Audio Launch Posters
Share
Saivam Movie Audio Launch Posters ‘தலைவா’ படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குனர் விஜய் தன் திறமையை நிரூபிப்பதற்காக எடுத்துள்ள படம் ‘சைவம்’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, நாசர் மற்றும் பேபி சாரா ஆகியோரும் நடிக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த வாரம் வெளியாகவுள்ள இந்த படத்தின் பிரத்தியேக காட்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா அவர்களின் மனைவியும், முன்னாள் நடிகையுமான அமலா, படத்தை மிகவும் பொஆரத்தியதொடு, தன்னை சந்திப்பவர்களிடம் படத்தை பற்றி மிகவும் சிலாகித்து பேசி வருகிறார். “சைவம் மிகவும் அழகான, அருமையான் ஒரு கலாசார பதிவு. பிராணிகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற பதிவையும், நமது கலாசார வேர்களை மறந்து விடக்கூடாது என்ற மைய கருத்தையும் கொண்டு உள்ள 'சைவம்' நிச்சயம் வரி விலக்குக்கு உகந்த படம். கலாசாரம் மற்றும் பிராணிகளின் மேல் அன்பு என்ற விஷயங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த படம் ஒரு வழிகாட்டியாக இருக்கும். இந்த படம் சம்பத்தப்பட்ட எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார் அமலா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.