‘காமராஜருக்காக’ நடித்துக் கொடுக்கும் சமுத்திரகனி

மறைந்தாலும் நம்மோடு எப்போதும் வாழும் ஒரு பெரும் தலைவர் என்றால் அது ‘பெருந்தலைவர்’ காமராஜர் தான். அவரை பற்றி, அவரின் வாழ்கையை 2௦௦4-ம் ஆண்டே ‘காமராஜ்’ என்ற திரைப்படம் வெளியாகியது. பலராலும் பாராட்டப்பட்ட “காமராஜ்” திரைப்படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழிற் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு சேர்த்துள்ளனர். காமராஜ் வேடத்தில் பிரதீப் மதுரம் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சாருஹாசன், வீ.எஸ்.ராகவன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. இவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் விரைவில் படமாக்கப்பட உள்ளது. ரமணா கம்யூனிகேசன்ஸ் தயாரிப்பில், எழுதி இயக்கி இருப்பவர் பாலகிருஷ்ணன்.
காமராஜரின் 112-வது பிறந்த நாளான 15.07.2014 அன்று இந்தியா முழுவதும் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
