செரீனாவிடமிருந்து நழுவிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்!

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் அலெக்ஸிஸ் ஓஹானியன் என்பவரை
திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் நியூயார்க்கில் உள்ள இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செரினாவிற்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் அடுத்த ஆண்டு நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகமாகியுள்ளது.
இதனிடையே, செரினாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் வெற்றி பெற பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
