Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செப்டம்பர்-18ஆம் தேதி 'கத்தி' ஆடியோ ரிலீஸ்..!

•On August 26, 2014
kathi
Share

வரும் செப்டம்பர்-18ஆம் தேதி, வெறுமனே சாதாரண ஒரு வியாழக்கிழமையாக மட்டும் கடந்து போகப்போவதில்லை. காரணம் அன்றுதான் இளைய தளபதி விஜய் நடித்துவரும் ‘கத்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே விஜய்யின் ‘தலைவா’ படத்தின் இசைவெளியீட்டின்போது சிலர் பேசிய வார்த்தைகள்தான் தேவையில்லாத சில பிரச்சனைகளுக்கு அப்போது வாசலை திறந்து விட்டதாம். அதனால் எதற்கு வீண் வம்பு என அடுத்துவந்த ‘ஜில்லா’வின் இசை வெளியீட்டை சிம்பிளாக முடித்துவிட்டார்கள்.

இருந்தாலும் விஜய்க்கு அதில் சற்று வருத்தம் தான். அதனால் இந்தமுறை இசை வெளியீட்டு விழாவை பட்டினாப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். லைக்கா பிரச்சனையும் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.. ஆகவே பிரச்சனை அதில் இல்லை..

விழாவிற்கு வரும் சிறப்பு விருந்தினர்களோ, உடன் நடித்தவ்ர்களோ விஜய்யைப்பற்றி தேவையில்லாமல் ஆஹா, ஓஹோ என அரசியல் அளவில் தூக்கி வைத்து பேசுவதால் தான் பிரச்சனை. அதில் விஜய் சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டால் விழா சிறப்பாக நடக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.