இசை எப்ப வரும்..? எங்கிருந்து வரும்..?

நீண்ட இடைவெளிக்கு அப்புறமா எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிச்சுட்டு வர்ற படம் ‘இசை’. இந்தப்படத்துல எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியா சாவித்ரிங்கிற புதுமுகம் நடிக்கிறாங்க. இந்த படம் இரண்டு இசையமைப்பாளர்களை சுத்தி நடக்குற, அவர்களிடையே ஏற்படுற ஈகோ மோதலை பத்திய கதைன்னும் படத்தை பத்தி ஒரு சலசலப்பு இருந்துட்டு வருது.
ஏற்கனவே தேவா, ஏ.ஆர்.ரகுமான் அப்படின்னு ரெண்டு ஜாம்பவான்களோட ட்ராவல் பண்ணின எஸ்.ஜே.சூர்யா, இந்தப்படத்துக்கு தானே இசையமைப்பாளரா மாறிட்டார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை வர்ற அக்டோபர்-2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்னைக்கு நடத்த முடிவு செஞ்சிருக்காரு எஸ்.ஜே.சூர்யா. அதுக்கு முன்னாடி வர்ற ஆகஸ்ட்-29ஆம் தேதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு விடலாம் எனவும் முடிவு எடுத்திருக்காறாராம் எஸ்.ஜே.சூர்யா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
