சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம் டிசம்பர் 6-ல் தொடக்கம்!

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம், "சைரா நரசிம்மரெட்டி". இது ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் இந்த படம் தயாராகிறது.
இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து வருகிறார் சிரஞ்சீவி. சரித்திர காலத்து கதை என்பதால், இந்த படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடக்கிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்கயிருப்பதாக முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் செட் போடும் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்போது படப்பிடிப்பை டிசம்பர் 6-ந்தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.
அதோடு, சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடி சேரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, சுதீப், விஜய் சேதுபதி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
