Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"சர்கார்" டீசர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அறிவிப்பு..!

•On October 10, 2018
sar
Share
விஜய் நடிப்பில் A.R. முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள அரசியல் அதிரடி திரைப்படமான சர்கார் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் ரசிகர்கள் நீண்டநாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த அத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம். இன்று சரியாக 12 மணி அளவில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவின் மூலம், சர்க்கார் டீசர் வருகிற அக்டோபர் 19ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாக இருப்பது அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மெர்சல் டீசர் படைத்த குறைந்த நேரத்தில் அதிக லைக் என்ற சாதனையை, சர்க்கார் பட டீசரில் முறியடிக்கும் நோக்கில் ஆவலோடு காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.