சந்திரகாந்தா தொடருக்கு தமிழ் சேனல்களுக்கிடையே நிலவும் போட்டி!

1994ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு சுனில் அக்னிஹோத்ரி இயக்கத்தில் நீர்ஜா குலேரி தயாரிப்பில், சபாஷ்கான், ஷிகா ஸ்வரூப் நடிப்பில் உருவான தொடர் சந்திரகாந்தா. இதுவரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வெற்றிகொடுத்த தொடர் சந்திரகாந்தா.
இப்போது புதிய தொழில்நுட்பத்துடன் அதே சந்திரகாந்தா ப்ரேம் யா பஹேலி சந்திரகாந்தா என்ற டைட்டிலில் பிரமாண்டத்துடன் ரீமேக் ஆகிவருகிறது. இந்த தொடரில் கவுரவ் கண்ணாவும், கிரித்திகா கம்ராவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் அன்கிட் அரோரா, சுரேஷ் பெர்ரி, ஹரிஷ் வசிஸ்ட், புனித் வசிஸ்ட் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்த ரீமேக் தொடரை சோனாலி பகடே, சசிந்தா ஹென்னா, ஷப்ட் மரபோபென், மேத்தீவட் ஜென்கிஸ் ஆகியோர் இயக்குகிறார்கள்.
கடந்த 4ந் தேதி முதல் லைப் ஓகே சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரை ஒளிபரப்ப தமிழ் சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் இதுவரை எந்த தமிழ் சேனலும் இந்த புதிய தொடரை ஒளிபரப்ப முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தொடரின் 15 பகுதிகள் முடிந்த பிறகு தமிழ் சேனலிலும் சந்திரகாந்தா தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
