நாசரை ஓரம் கட்டினாரா நடிகர் சித்தார்த்?

நடிகர் சித்தார்த் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள "ஜில் ஜங் ஜக்" திரைப்படம் மூன்று நாட்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்றதா தோல்வி அடைந்ததா என்பது அப்புறம் பாப்போம். "ஜில் ஜங் ஜக்" திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டவர்கள் இதே சத்யம் சினிமாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடிகர் சங்கத்தின் முன்னால் பொதுச்செயலாளர் ராதாரவியும், தற்போதைய தலைவர் நாசரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு படம் வெளிவருவதருக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், படத்தில் பணியாற்றிய அணைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நாசரை தவிர அணைத்து நடிகர்களும் ஆஜரானார்.
பெரும்பாலான படங்கள் வெளியீட்டுக்கு ஓர் இரு நாட்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பத்திரிக்கையாளர்களுக்கு போட்டு காட்டுவது வழக்கம். அதை போல் இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் காட்சி பட வெளியீட்டிற்கு முன் நாள் போட்டு காண்பிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்களுக்கு படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை தருவது வழக்கம் அதுவும் நடந்தது. விஷயம் என்ன வென்றால் அந்த லிஸ்டில் படத்தில் சித்தார்த்தின் தந்தையாக நடித்துள்ள நாசரின் பெயர் மிஸ்ஸிங்.
இதை பற்றி விசாரித்ததில், நடிகர் சங்கத்தில் முன்பு இருந்த நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி கொண்ட குழு நடிகர் சங்கத்தின் இடத்தை சத்தியம் சினிமாஸ்'க்கு சொந்தமான "SPI சினிமாஸ்'க்கு" குத்தகைக்கு விட்டுள்ளது. பின்னர் அதில் ஊழல் நடந்தது என்று நாசர் மற்றும் விஷால் குழுவினர் குற்றம் சாட்டி, தேர்தலில் நின்று வெற்றி பெற்றனர் என்பது அனைவரும் அறிந்தது. வெற்றி பெற்ற இவர்கள் சில நாட்களுக்கு முன்பு சத்தியம் சினிமாஸ்'க்கு அன்றைய நடிகர் சங்கம் நிர்வாகிகள் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து அந்த இடத்தை மீட்டுள்ளது.
இந்த செயலினால் சத்தியம் சினிமாஸ்'க்கு நடிகர் நாசர் மற்றும் தற்போதைய நடிகர் சங்க குழுவினர் மீது மனகசப்பு. இதன் காரணமாக சத்தியம் சினிமாஸ் வெளியிட்டுள்ள "ஜில் ஜங் ஜக்" படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு நாசர் அழைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதே கானத்தினால் தான் நடிகர் நாசருடைய பெயர் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட படத்தின் நடிகர்கள் லிஸ்டிலும் இடம் பெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிகிறது.
இதன் காரணமாக தான் சத்தியம் சினிமாஸுடன் சேர்ந்து நாசரை ஓரம் கட்டினாரா நடிகர் சித்தார்த்? சித்தார்த் மற்றும் சத்தியம் சினிமாஸின் இந்த மட்டமான செயலை பற்றி நடிகர் நாசர் சற்றும் பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
