கார் விபத்தில் சிக்கினார் இயக்குனர் மு.களஞ்சியம்..!

திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் சென்ற கார் இன்று மதியம் ஆந்திராவில் விபத்திற்குள்ளானது. ஒரு திருமண விஷேசத்திற்காக சென்றபோது ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் அவரது உதவி இயக்குனருக்கும் பலத்த அடிபட்டுள்ளது..
துரதிர்ஷ்டவசமாக இவர்களுடன் சென்ற அருண் என்ற நண்பர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். ஓங்கோலில் உள்ள வாத்சல்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இயக்குனர் களஞ்சியத்துக்கும் அவரது உதவியாளருக்கும் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
