கார் சீஸ் பண்ற பந்தயத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா...?

கார் பந்தயம் தெரியும்.. அதே மாதிரி காரை சீஸ் பண்றதுகூட கேள்விப்பட்டிருக்கோம். ஆனா அதென்ன கார் சீஸ் பண்ற பந்தயம்..? அப்படி ஒன்னு இருக்கா என்ன என கேள்வி எழுப்பினால், இருக்கு என்று அடித்துச்சொல்லுகிறார் புதிதாக தயாராகியுள்ள ‘பர்மா’ படத்தின் இயக்குனர் தரணிதரன்..
லோன் போட்டு கார் வாங்கியவர்கள் ஒரு கட்டத்தில் பணம் கட்டமுடியாமல் நிற்கும்போது கடன் கொடுத்த நிறுவனங்கள் காரை சீஸ் பண்ணி எடுத்துக்கொண்டு போவார்கள்... இப்படி காரை சீஸ் பண்ணித் தருவதற்கென்றே ஆட்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்குள் நடக்கும் போட்டி, துரோகங்கள் என புது கதைக்களத்தில் படத்தை இயக்கியுள்ளார் தரணிதரன். நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார்.
நேற்று இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் இருந்து உருவான சுதர்சன் எம்.குமார் என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் செப்-12ஆம் தேதி படம் வெளியாகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
