Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆரிக்கு ஜோடியாக மீண்டும் கேரளத்து கிளி..!

•On August 29, 2014
Keerthi-Suresh-Stills-27
Share

‘நெடுஞ்சாலை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிருஷ்ணா - ஆரி மீண்டும் இணையும் படம் தான் ‘மானே தேனே பேயே’. பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..? இந்தப்படத்தின் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஏற்கனவே ‘நெடுஞ்சாலை’ படத்தில் ஜோடியாக நடித்த ஷிவதா நாயரும் கேரளத்து கிளி தான்.. இவர்களுடன் சென்ராயன், மதுமிதா ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். யுகபாரதி, விவேகா, ஆகியோருடன் இயக்குனர் கிருஷ்ணாவும் பாடல் எழுதுகிறார். இசையமைக்கிறார் சி.சத்யா

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டால், “ஏற்கெனவே நான் இயக்கிய ‘சில்லுனு ஒரு காதல்’ காதல் கலந்த குடும்பப் படம். ‘நெடுஞ்சாலை’ படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்கள்... ஆனால் ‘மானே தேனே பேயே’ அந்த இரண்டு படங்களிலிருந்தும் மாறுபட்டதாக இருக்கும். காதலும் காமெடியும் கலந்து படம் செல்லும்” என்கிறார்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.