கார்த்தி - வடிவேலு காம்பினேசன் எப்படி இருக்கும்..?

கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ்’ ரிலீஸாக இருக்கிறது.. அடுத்ததாக குட்டிப்புலி முத்தையா டைரக்ஷனில் ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இதுவரை கார்த்தி நடித்த படங்களில் சந்தானம் அல்லது சூரி தான் காமெடி கூட்டணி அமைத்து வந்தார்கள்.
ஆனால் வடிவேலு, விவேக் என இரண்டு காமெடி ஜம்பவான்களுடனும் இன்னும் கார்த்தி நடிக்கவே இல்லை. அந்தக்குறை அடுத்ததாக ‘ரௌத்திரம்’ பட இயக்குனர் கோகுல் இயக்கும் படத்தின் மூலம் தீர்ந்துவிடும் என்றே தெரிகிறது. இவர்தான் சூப்பர்ஹிட்டான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தையும் இயக்கியவர்.
இந்தப்படத்தில் கார்த்தியுடன் காமெடி கூட்டணி அமைக்க தற்போது வடிவேலுவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையானால் ரசிகர்களுக்கு புதுவிதமான காமெடி விருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிர படத்தின் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
