'காதல் கண் கட்டுதே' நடிகருக்கு இப்பொழுது திருமணம் கிட்டுதே...

கடந்த சில மாதங்களுக்கு வெளியாகிய காதல் கண் கட்டுதே படம் அனைவரும் முன்னே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இப்படத்தின் கதாநாயகி அதுல்யா ரவிக்கும் கதாநாயகன் கே.ஜிக்கும் ஜோடி பொருத்தம் நன்றே அமைந்தது.
தற்பொழுது கே.ஜிக்கு கூடிய சிக்கிரம் திருமணம் ஆக உள்ளது . இது குறித்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் கே.ஜி வெளியிட்டுள்ளார். “நண்பர்களே.. நந்தினி ஸ்ரீனிவாசன் என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள மகிழ்ச்சியான செய்தியை இப்போது வெளியிடுகிறேன்.
இது என்னுடைய நெருங்கிய நட்பு வட்டாரத்திற்கு மட்டுமே தெரியும். கே.ஜி திருமணம் செய்து கொள்ள இருக்கும் நந்தினி ஸ்ரீனிவாசன், மென்பொருள் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சேனல்களில் அளித்த பேட்டியின் போது கூட இந்த தகவலை நான் வெளியிடவில்லை. ஏனெனில் அப்போது காதல் கண் கட்டுதே படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன. என்று கே.ஜி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
