காஜலும் அமலாபாலும் இப்போ திக் பிரண்ட்ஸ்..!

திரைப்பட விழாக்கள் எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ, நடிகர்கள் அதிலும் குறிப்பாக பாராமுகம் காட்டும் நடிகைகளுக்குள் நட்பை வளர்க்க உதவுகின்றன என்பது ஒரு வகையில் உண்மைதான். சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 61வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ஸ்ருதிஹாசனும் தமன்னாவும் கலந்துகொண்டனர்.
அப்போது இருவரும் இணைந்து ஒன்றாக போஸ் கொடுத்தபடி செல்பி போட்டோ எடுத்து வெளியிட்து தங்கள் நட்பை உறுதிப்படுத்தினர். தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் இவர்கள் போட்டியாளர்கள் என்பதால் இவர்களை பற்றிய எதிர்மறையான செய்திகளே வெளிவந்துகொண்டிருந்தன. அதை உடைத்தது இந்த செல்பி..
அதேபோல சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற அம்ரிதா டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஜல் அகர்வாலும் அமலா பாலும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசியபடி செல்பியும் எடுக்கொண்டனர். இதே இந்த இருவரும் ராம்சரணுடன் ஒரு தெலுங்குப்படத்தில் நடித்தபோது அவ்வளவாக பழகிக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 ,
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
