Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஜனாதிபதி மகளுக்கு அலுவலக வேலை !

•On November 13, 2017
Swathi
Share
Swathi இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி. இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணி புரிந்து வருகிறார். இவர் வழக்கமாக போயிங் 787 மற்றும் போயிங் 777 விமானங்களில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். நெடுந்தொலைவு பறக்கும் இந்த விமானங்களில் அவருக்கு பணிகள் தரப்பட்டிருந்தன. தற்போது ஏர் இந்தியா விமான நிர்வாகம் அவரை அலுவலகத்தில் பணி புரியுமாறு கூறி உள்ளது. கடந்த ஒரு மாதமாக ஸ்வாதி விமான நிலைய தலைமை அலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஏர் இந்தியா அதிகாரி ஒருவர், "ஸ்வாதி ஜனாதிபதியின் மகளாக இருப்பதால் அவரை விமானப் பணிகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்த்த இயலவில்லை. அவருடன் கூட வரும் பாதுகாவலர்களுக்காக பயணிகளின் இருக்கைகள் ஒதுக்கப் பட வேண்டியுள்ளது. அதன் காரணமாக அவர் அலுவலகப் பணியில் ஈடு படுத்தப் பட்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.